Wednesday 21 September 2016

தமிழில் .....



தமிழில் உள்ள 247 எழுத்துகளில் 42 எழுத்துக்களுக்கு மட்டும் தனியே பொருள் உண்டு..அவற்றில் ஏதாவது ஐந்து எழுத்துக்களைக் கொடுத்துஅதற்கான பொருள் என்ன என்பதைப் போல வினா அமையும். தனிப் பொருளைத் தரும் 42 எழுத்துக்களைக் காண்போம்.
உயிர் எழுத்துகள்:
ஆ - பசு
ஈ - கொடுத்தல்,பறக்கும் பூச்சி
ஊ - இறைச்சி,உணவு
ஏ - அம்பு, இறுமாப்பு
ஐ - தலைவன்,அரசன்

'ம' வரிசை:
மா - பெரிய ,மாமரம்
மீ - மேலே,உச்சி
மூ - மூப்பு,முதுமை,மூன்று
மே - அன்பு,மாதம்,மேலே
மை - கண்மை,இருள்
மோ - முகர்தல்

'த' வரிசை:
தா - கொடுத்தல்,கேடு
தீ - நெருப்பு,சினம்,தீமை
தூ - வெண்மை,தூய்மை
தே - தெய்வம்,கடவுள்
தை - மாதம்

'ப' வரிசை:
பா - பாட்டு,அழகு,பாதுகாப்பு
பூ - மலர்,பூமி,
பே - அச்சம்
பை - கைப்பை,
போ - போதல்,செல்லுதல்

'ந' வரிசை:
நா - நாக்கு,
நீ - முன்னிலை, நீ
நே - அன்பு,அருள்
நை - வருந்துதல்
நோ - துன்பம்,நோய்

'க' வரிசை:
கா - சோலை,காவல்
கூ - பூமி,உலகம்,
கை - உறுப்பு
கோ - அரசன்,தலைவன்,பசு,

'வ' வரிசை:
வா - வருதல்
வீ - மலர்
வை - வைத்தல்,வைக்கோல்
வௌ - கைப்பற்று

'ச' வரிசை:
சா - சாதல்,இறத்தல்
சி/சீ - இகழ்ச்சி, வெறுப்பு
சே - எருது

'ய' வரிசை:
யா - ஒரு வகை மரம்

தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை
தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்

தமிழ் நாடக தலைமையாசிரியர், நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்

உவமைக் கவிஞர் - சுரதா

தெற்காசிய சாக்ரடீஸ் – பெரியார்

அருண்மொழித் தேவர் - சேக்கிழார்

இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்

சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான் -புதுமைப்பித்தன்
முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை

தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின், சித்தன் – ஜெயகாந்தன்
தமிழ் தாத்தா - உ.வே.சா

தமிழ் உரைநடையின் தந்தை,தமிழ் இலக்கிய தோற்றுனர் -வீரமாமுனிவர்
தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவல
ர்
வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு
தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்

தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி – அகத்தியர்
கவிக்கோ - அப்துல் ரஹ்மான்

மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
உச்சிமேல் புலவர் கொள் – நச்சினார்க்கினியர்

காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்

சொல்லின் செல்வன் - அனுமன்

உரையாசிரியர் - இளம்பூரணார்.
பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர்,இயற்கை கவிஞர், புதுவைக்குயில், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்

மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்- சீவக சிந்தாமணி
நெடுந்தொகை – அகநானூறு

இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை

பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி
திருத்தொண்டர் புராணம், வழிநூல், திருத்தொண்டர் மாக்கதை,

அறுபத்துமூவர் புராணம் - பெரிய புராணம்

ராமகாதை, ராம அவதாரம், கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்
தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்

பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்

குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்
வடமொழியின் ஆதி காவியம் – இராமாயணம்
இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை

நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் – நாலடியார்
பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் – கலம்பகம்
பாவைப்பாட்டு – திருப்பாவை

தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் – ராமாவதாரம்
தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்

தமிழர் வேதம் – திருமந்திரம்
பாணாறு – பெரும்பாணாற்றுப்படை

வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்
புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் – புறநானூறு

தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது

மறை,வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா,இயற்கைவாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை – திருக்குறள்

செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள்

காப்பியம்,முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம்,சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம்,

புரட்சிக்காப்பியம்,உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் -சிலப்பதிகாரம்

வேர்ச்சொல்லை கண்டறிதல்:
ஒரு சொல்லின் மூலச்சொல் எதுவோ அதுவே அச்சொல்லின் வேர்ச்சொல் ஆகும்.

முதலில் கொடுத்த சொல்லை நன்றாக படியுங்கள்.பிறகு கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளையும் வாசியுங்கள்.அதில் எந்த சொல் கட்டளை பிறப்பிக்கும்படி இருக்கிறதோ அந்தச் சொல் தான் வேர்ச்சொல் என்று தீர்மானியுங்கள்.

உதாரணமாக,
படித்தான் என்பதன் வேர்ச்சொல் கண்டுபிடி
அ) படித்த ஆ) படித்து இ) படி

இதில் வேர்ச்சொல் "படி" ஆகும். ஏனெனில் மேற்கண்டவற்றில் கட்டளை பிறப்பிக்க கூடிய சொல் "படி" ஆகும். கொடுக்கப்பட்ட விடைகளுக்கான தெரிவுகளில் எந்த சொல் கட்டளை பிறப்பிப்பதாக உள்ளதோ, அந்த சொல்லே வேர்ச்சொல் ஆகும். உங்களுக்கு எளிதாக புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். இல்லை என்றால் மேலும் சில உதாரணங்களை கீழே பாருங்கள்.

வந்தான் - வேர்ச்சொல் கண்டுபிடி
அ)வந்த ஆ)வந்து இ) வந்தனன் ஈ)வா
விடை : ஈ)வா

பார்த்தான் - வேர்ச்சொல் கண்டுபிடி
அ)பார்த்த ஆ)பார் இ)பார்த்து ஈ)பார்க்கிற
விடை : ஆ)பார்

கேட்டான் - வேர்ச்சொல் கண்டுபிடி
அ)கேள் ஆ)கேட்ட இ) கேட்டு ஈ) கேட்டனன்
விடை : அ)கேள்

வேர்ச்சொல் என்றாலே கட்டளை பிறப்பிக்கும்படிதான் இருக்கும்.

: மனோன்மணியம்
• நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பு உடையதாக விளங்குவது மனோன்மணியம் ஆகும்
• வடமொழி நாடகங்களுக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல் இது.
• இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது.
• எனினும் இது வழிநூல் என என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்படும் சிறப்புடையது.
• நன்னூல் மரபு = அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல் மரபு
• இந்நாடகம் 5 அங்கங்களையும், 20 காட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.
• இடையே “சிவகாமி சரிதம்” என்னும் துணைக் கதை ஒன்றும் உள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார்:
• ஊர் = கேரள மாநிலம் ஆலப்புழை
• பெற்றோர் = பெருமாள் பிள்ளை, மாடாத்தி அம்மையார்
• இவர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
• கோடாக நல்லூர் சுந்தர ஸ்வாமிகள் என்பவரைத் தமது ஞானாசிரியராகப் கொண்டு ஒழுகி வந்தார்
சிறப்பு பெயர்:
• ராவ்பகதூர்
• தமிழ் செய்யுள் நாடக இலக்கியத்தின் தந்தை
இவரின் படைப்புகள்:
• நூல் தொகை விளக்கம்
• திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி
• திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி
• Some mile stones in tamil litt
• Some early sovereigns of travameare
சிறப்பு:
• அந்நாளைய சென்னை மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது
• தமிழ்நாடு அரசு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்னும் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி பெருமை படுத்தியுள்ளது.
• இவரின் “நீராருங்கடலுடுத்த” என்ற தமிழ் வாழ்த்துப்பாடல் தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டுள்ளது
• இவரின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு இசை அமைத்தவர் = எம்.எஸ்.விசுவநாதன்
• இவரைத் “தமிழ் செய்யுட் நாட இலக்கியத்தின் தந்தை” எனப் போற்றுவர்
கா.சு.பிள்ளை கூற்று:
• ‘தமிழ் இலக்கியத்தில் கால ஆராய்ச்சியைத் தொடங்கி வைத்த பெருமை இவருடையதே” என்கிறார்.
மொழிப்பெயர்ப்பு நூல்கள்:
• இவர் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

காப்பியங்கள்:
• “பொருட் தொடர்நிலைச் செய்யுள்”, காப்பியம் எனப்படும்.
• காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் = தண்டியலங்காரம்

• காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும்.
ஐம்பெரும்காப்பியங்கள்:

• ஐம்பெரும்காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் = மயிலைநாதர்
• ஐம்பெரும்காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் = கந்தப்பதேசிகர்(திருத்தணிகைஉலா)
• சிலப்பதிகாரம் = இளங்கோவடிகள்

• மணிமேகலை = சீத்தலைச் சாத்தனார்
• சீவக சிந்தாமணி = திருத்தக்கதேவர்

• வளையாபதி = பெயர் தெரியவில்லை
• குண்டலகேசி = நாதகுத்தனார்

• சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் எனப்படும்.
• சமணக் காப்பியங்கள் = சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி
• புத்தக் காப்பியங்கள் = மணிமேகலை, குண்டலகேசி
சுத்தானந்த பாரதி:

• கவியோகி சுத்தானந்தபாரதி ஐம்பெரும்காப்பியங்களையும் அணிகலன்களாக உருவகிக்கிறார்.

காதொளிரும் குண்டலமும் கைக்குவளையாபதியும்
கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும்
மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்போது
ஒளிரும் திருவடியும்

ஐம்பெரும்காப்பியங்கள் அட்டவணை:

நூல் சமயம் பாவகை ஆசிரியர் நூல் அமைப்பு
சிலப்பதிகாரம் சமணம் நிலைமண்டில ஆசிரியப்பா + கொச்சக கலிப்பா இளங்கோவடிகள் 3 காண்டம், 30 காதை, 5001அடிகள்
மணிமேகலை பௌத்தம் நிலைமண்டில ஆசிரியப்பா சீத்தலைச் சாத்தனார் 30 காதை, 4755 வரிகள்
சீவகசிந்தாமணி சமணம் விருத்தம் திருத்தக்கதேவர் 13 இலம்பகம், 3145 பாடல்கள்
வளையாபதி சமணம் விருத்தம் 72 பாக்கள் கிடைத்துள்ளன
குண்டலகேசி பௌத்தம் விருத்தம் நாதகுத்தனார் 224 பாடல்கள் கிடைத்துள்ளன
ஐம்பெருங்காப்பியங்களின் வேறுபெயர்கள்:
நூல் வேறுபெயர்கள்
சிலப்பதிகாரம் • தமிழின் முதல் காப்பியம்
• உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
• முத்தமிழ்க்காப்பியம்
• முதன்மைக் காப்பியம்
• பத்தினிக் காப்பியம்
• நாடகப் காப்பியம்
• குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
• புதுமைக் காப்பியம்
• பொதுமைக் காப்பியம்
• ஒற்றுமைக் காப்பியம்
• ஒருமைப்பாட்டுக் காப்பியம்
• தமிழ்த் தேசியக் காப்பியம்
• மூவேந்தர் காப்பியம்
• வரலாற்றுக் காப்பியம்
• போராட்ட காப்பியம்
• புரட்சிக்காப்பியம்
• சிறப்பதிகாரம்(உ.வே.சா)
• பைந்தமிழ் காப்பியம்
மணிமேகலை • மணிமேகலைத் துறவு
• முதல் சமயக் காப்பியம்
• அறக்காப்பியம்
• சீர்திருத்தக்காப்பியம்
• குறிக்கோள் காப்பியம்
• புரட்சிக்காப்பியம்
• சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
• கதை களஞ்சியக் காப்பியம்
• பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
• பசு போற்றும் காப்பியம்
சீவக சிந்தாமணி • மணநூல்
• முக்திநூல்
• காமநூல்
• மறைநூல்
• முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
• இயற்கை தவம்
வளையாபதி
குண்டலகேசி • குண்டலகேசி விருத்தம்
• அகல கவி

கம்பராமாயணம்
ஆசிரியர் குறிப்பு:
• பெயர் = கம்பர்
• ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர்
• தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன்
• மகன் = அம்பிகாபதி
• மகள் = காவிரி
ஆசிரியரின் சிறப்பு பெயர்:
• கவிச்சக்ரவர்த்தி
• கவிப்பேரரசர்
• கவிக்கோமான்
• கம்பநாடுடைய வள்ளல்
இவரின் படைப்புகள்:
• ஏர் எழுபது
• சிலை எழுபது
• திருக்கை வழக்கம்
• சரஸ்வதி அந்தாதி
• சடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது)
கம்பராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்:
• கம்பசித்திரம்
• கம்பநாடகம்
• தோமறுமாக்கதை
• இயற்கை பரிணாமம்
நூல் அமைப்பு:
• காண்டம் = 6
• படலம் = 113
• மொத்த பாடல்கள் = 10569
• முதல் படலம் = ஆற்றுப்படலம்
• இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம்
காண்டங்கள்:
• பால காண்டம்
• அயோத்தியாகாண்டம்
• ஆரண்யகாண்டம்
• கிட்கிந்தா காண்டம்
• சுந்தர காண்டம்
• யுத்தகாண்டம்
• ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய “உத்தர காண்டம்”
சிறப்பு:
• மு.இராகவையங்கார் = “வடமொழி தென்மொழிக் காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக்கோலைத் தோய்த்துத் தம் கப்பிய ஓவியத்தைக் கம்பநாடார் வரைந்தார்".
• வ.வே.சு.ஐயர் = “கம்பயராமாயணம் தனக்கு முதல் நூலான வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும்”
• எஸ்.மகாராஜன் = “உலகத்திலேயே வேறொரு நாட்டில், இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய மனதை இப்படி ஆட்கொண்டதில்லை”
• பாரதியார் = “கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்கிறார்.
• பாரதியார் = “கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என்கிறார்.
• கவிமணி = “வீசும் தென்றல் காற்றுண்டு – கையில் கம்பன் கவியுண்டு” என்கிறார்.
• “கல்வியிற் பெரியவர் கம்பர்”
• “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்”
• “கம்ப நாடன் கவிதையிற்போல் கற்றோருக்கு இதயம் களியாதே”
• “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்”
• தமிழுக்கு கதி = கம்பர், திருவள்ளுவர்
• 96 வகை ஓசை வகைகளை கம்பர் கையாண்டுள்ளார்.
பொதுவான குறிப்புகள்:
• கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் = இராமாவதாரம்
• கம்பர் இறந்த இடம் = நாட்டரசன் கோட்டை
• கம்பரின் சமாதி உள்ள இடம் = நாட்டரசன் கோட்டை
• வான்மீகி எழுதாத “இரணியன் வதைப் படலம்” கம்பராமாயணத்தின் மிக சிறந்த பகுதியாக கருதப்படுகிறது.
• கமபராமாயணம் ஒரு வழி நூல்
• கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை 1000 பாடல்களுக்கு ஒருமுறை பாடியுள்ளார்.
• கம்பார் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் = திருவரங்கம்
• கம்பருக்கு தமிழக அரசு திருவழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து சிறப்பித்துள்ளது.
• இவர் மூன்றாம் குலோத்துங்கனின் அவை களப் புலவர் ஆவார்.
• இவரின் மகன் அம்பிகாபதி சோழன் மகளை காதலித்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் அம்பிகாபதி, அமராவதி இருவரின் உயிர் நீங்க, இவர் சோழ நாட்டை விட்டு வெளியேறினார்.
• 15 நாட்களில் கம்பராமாயாணம் முழுவதும் எழுதி முடித்தார்(10569 பாடல்கள்)
மேற்கோள்:
• தாதகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும்
• எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தாலே
• இல்லாரும் இல்லை உடையாரும்
• இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்
• அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால்
• இன்று போய் நாளை வா
• வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
• வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
• உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்
• கை வண்ணம் அங்குக் கண்டேன்
கால் வண்ணம் இங்குக் கண்டேன்
• அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா

. எத்தியோப்பியாவின் தலைநகரம் 'அடிஸ் அபாபா' வின் பொருள் என்ன?புதிய மலர்

. International Air Transport Association IATA - தலைமையகம் எது ?ஜெனிவா

. நிரங்கரி - என்பது என்ன ?சீக்கிய மதப்பிரிவு

. உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது?பாபிலோன்

. ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது ?லூதுவேனியா
. தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?மேலக்கோட்டை

. முதல் சமத்துவபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது? திருநெல்வேலி

. மத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?ஆர்.எஸ். சர்க்காரியா

. வரதட்சிணை சாவுக்கு அளிக்கப்படும் தண்டனை எத்தனை ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்?7 ஆண்டுகள்

. தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?மேலக்கோட்டை

. மிசா(MISA) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன?1971

. கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?நீதியரசர் கோகுலகிருஷ்ணன் குழு

மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?1971

பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர்?30

இந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவர் யார் ?டாக்டர்.எஸ். ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?ஜானகி ராமச்சந்திரன்

பூஜ்ஜிய நேரம் என்றால் என்ன ?கேள்வி நேரம்

ஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்?6 வாரத்துக்குள்

இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?ஜாஹிர் உஷேன்

வைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன ?தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஆலயத்திற்குள் செல்ல

திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?`1949

ஜெயின் விசாரணைக் குழு யாருடைய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டது?ராஜீவ் காந்தி

மத்திய திட்டக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது ?1950

இந்தியாவின் பிரதமராகதேர்வு செய்யப்படக் குறைந்தபட்ச வயது என்
ன?25

இந்தியாவின் மக்களவையையும் மாநிலங்களவையையும் ஒரே நேரத்தில் கூட்டும் அதிகாரம் உள்ளவர்? குடியரசுத்தலைவர்
1997-ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை எந்த விழிப்புணர்வுக்காகத் தேர்ந்தெடுத்தது?சுற்றிச்சுழல் மற்றும் வளர்ச்சி

சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு எது? 1969

ஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்? 6 வாரத்துக்குள்

. இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்? ஜாஹிர் உஷேன்

. வைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன ?தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஆலயத்திற்குள் செல்ல

திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?1949

1 Comments:

At 24 January 2022 at 08:51 , Anonymous Anonymous said...

Free online casino online【WG】slots
Free online casino online【WG98.vip】⚡, casino online, free, play slots games online, free 메리트카지노 slot games online, slot game casino online, 우리카지노 계열사 slot machine 더킹카지노

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home